போராட்டம் தோற்கவில்லை: சரத் பொன்சேகா எச்சரிக்கை
காலிமுகத்திடல் இளைஞர்களின் போராட்டம் தோற்கவில்லை என்று சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வின் போது நேற்று(12) அவர் கருத்து தெரிவிக்கையிலே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது போராட்டம் தோற்றுவிட்டதாக பலரும் மனப்பால் குடிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேடித் தேடிக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
காலிமுகத்திடல் போராட்டத்தின் மாற்றங்கள்
ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் போராட்டம் தோற்றுவிட்டது, பொருளாதார நெருக்கடி தீர்ந்து விட்டது என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இளைஞர்களின் போராட்டம் காரணமாகத் தான் நாட்டில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன். நாளைய சந்ததிக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து சிந்திக்கப்படுகின்றது.
அந்த வகையில் போராட்டம் தோற்றுப் போகவில்லை. அது வேறு வடிவில் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.