உயரும் கச்சா எண்ணெய் விலை: விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்
ஈரான் போர் எதிரொலியாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேச எரிசக்தி முகாமை (IEA) தனது அவசரகால இருப்பிலிருந்து எரிபொருளை விடுவிக்க முடிவு செய்துள்ள போதிலும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நாடுகள் திணறி வருகின்றன.
ஆசிய வர்த்தகத்தில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 9% உயர்ந்து ஒரு பேரல் 100 டொலராக அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த வார தொடக்கத்தில் இது 120 டொலர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் கேட்கும் யுத்தத்தின் சத்தங்கள் - மரண ஓலங்கள்! அதியுச்ச தலைவர் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய தகவல்
மத்திய கிழக்கு எண்ணெயை அதிகம் நம்பியிருக்கும்
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள ஈரான், ஒரு பேரல் எண்ணெய் 200 டொலராக உயரும் என எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய அனைத்துக் கப்பல்களும் இலக்கு வைக்கப்படும் என ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

சர்வதேச எரிசக்தி முகமையின் 32 உறுப்பு நாடுகள் இணைந்து, தங்களது கையிருப்பிலிருந்து 400 மில்லியன் பேரல் எண்ணெயை சந்தைக்கு விட முடிவு செய்துள்ளன. இது 2022 உக்ரைன் போரின் போது வெளியிடப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றாலும், இது ஒரு தற்காலிகத் தீர்வே என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மத்திய கிழக்கு எண்ணெயை அதிகம் நம்பியிருக்கும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
எரிசக்தியைச் சேமிக்க தாய்லாந்து அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய (WFH) அறிவுறுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் அரசு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் பெட்ரோல் விலை ஒரு கேலன் 3.50 டொலரைத் தாண்டியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam