பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை தமிழர், முஸ்லிம்களிடையே பகிர வேண்டும்! - டிலான் வலியுறுத்து

Sri Lanka Parliament Dilan Perera Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka
By Rakesh Aug 12, 2022 10:17 PM GMT
Report

அமைச்சரவையை வரையறுத்து பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளைத் தமிழர்,முஸ்லிம்கள் இடையே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் இலங்கை தொடர்பில் சர்வதேசத்துக்குச் சிறந்த செய்தியை கொண்டு செல்ல முடியும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது டிலான் பெரேரா எம்.பி. மேலும் கூறுகையில்,

"நான் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கே ஆதரவளித்தேன். அதற்குக் காரணம் சர்வகட்சி அரசை அமைக்க வேண்டும் என்று பலரும் விடுத்த கோரிக்கையே ஆகும்.

சட்டபூர்வமாக தெரிவாகிய ஜனாதிபதிகள்

சஜித் பிரேமதாசவே அவரின் பெயரைப் பரிந்துரைத்திருந்தார். அதற்கு முதல் நாள் வரையில் டலஸ் அழகப்பெருமவுக்கே பெரும்பான்மையானவர்கள் ஆதரவளிக்கத் தீர்மானித்திருந்தனர்.

பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை தமிழர், முஸ்லிம்களிடையே பகிர வேண்டும்! - டிலான் வலியுறுத்து | Posts Of Prime Minister Speaker Should Be Shared

90 வீதமானவர்கள் அந்தத் தீர்மானத்திலேயே இருந்தனர். இதன்படியே நான் வாக்களித்தேன். இதற்கு முன்னர் ஜனாதிபதிகள் பலரின் சிம்மாசன உரைகளைக் கேட்டுள்ளோம். அவர்கள் சட்டபூர்வமாகத் தெரிவாகிய ஜனாதிபதிகளாகியுள்ளனர்.

ஆனால், அண்மையில் வேறு முறையில் அரசமைப்பு ரீதியில் வந்தார் எனக் கூறப்படும் ஜனாதிபதியின் உரையைக் கேட்டோம். அவர் சர்வகட்சி அரசு தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவர் ஜனாதிபதியாக இருந்தால் தமிழர் பிரதமர்

இந்நிலையில், சர்வதேசத்துக்குச் சிறந்த செய்தியொன்றைக் கூற முடியும். அமைச்சரவையை வரையறுத்து பிரதான பதவிகளை மற்றைய இனத்தவர்களிடையே பகிர்ந்துகொள்ளலாம்.

பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை தமிழர், முஸ்லிம்களிடையே பகிர வேண்டும்! - டிலான் வலியுறுத்து | Posts Of Prime Minister Speaker Should Be Shared

சிங்களவர் ஒருவர் ஜனாதிபதியாக இருந்தால் தமிழர் ஒருவரைப் பிரதமராக்கலாம். ஏன் இங்கு இவ்வாறு முடியாது? அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமாவுக்கு ஜனாதிபதியாக முடியுமென்றால் இங்கே தமிழ் பேசும் ஒருவர் பிரதமராகினால் என்ன? முஸ்லிம் ஒருவர் இங்கே சபாநாயகராகினால் என்ன? இதன்மூலம் இனவாத மனநிலையில் இருந்து விடுபட்டுள்ளோம் என்று சர்வதேசத்துக்குக் கூற முடியுமாக இருக்கும்.

புரட்சிகரமான இனவாதம் அற்ற போராட்டக்காரர்கள் கேட்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவையை அமையுங்கள். இதனைச் செய்து சிறந்த செய்தியை சர்வதேசத்துக்கு வெளிக்காட்டுங்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து எம்.பிக்களையும் உள்ளடக்கி துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமையுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US