சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் தடுமாறும் சஜித் அணி: நிபந்தனை விதிக்கும் விமல் அணி
"சர்வகட்சி அரசாங்கத்திற்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை" என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றிரவு நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசின் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை
"சர்வகட்சி அரசாங்கத்திற்க்கான உத்தியோகபூர்வ அழைப்பு இன்னும் விடுக்கப்படவில்லை. எனினும், அமைச்சுப் பதவிகளை மட்டும் இலக்காகக்கொண்ட அரசாக அது அமையக்கூடாது. நாம் அமைச்சுப் பதவிகளைப் பெறப்போவதும் இல்லை.
எனினும், சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். அரசின் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே அந்த ஒத்துழைப்பு வழங்கப்படும். தற்போதுவரை அந்த வெளிப்படைத் தன்மையைக் காணமுடியவில்லை. நாமும் இறுதி முடிவை எடுக்கவில்லை" என்றார்.
விமல் அணியின் நிபந்தனை
இதேவேளை "நாட்டை மீட்பதற்கான உரிய வழிகாட்டல்கள் அடங்கிய வேலைத்திட்டம் முன்வைக்கப்படுமானால் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்படும்" என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், தனி நபர்களைத் திருப்திப்படுத்தவும், அமைச்சுப் பதவிகளுக்காகவும் சர்வகட்சி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் ஒருவர் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தால் அதனை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்:ரமேஷ் பத்திரன |