இஸ்ரேலிய இராணுவ தலைமையகத்தை குறிவைத்த ஈரான்
இஸ்ரேலிய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளை தலைமையகம் மற்றும் 'ரஃபேல்' (Rafael) ஆயுத நிறுவனத்தின் தளங்கள் மீது ஈரான் பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் தற்போதைய போரின் 56ஆவது அலைத் தாக்குதல்கள் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை அறிவித்துள்ளது.
விமானத் தளத்தின் மீதும் ஈரான் தாக்குதல்
இதில் இஸ்ரேலின் பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான அல்-உடெய்ட் (Al Udeid) விமானத் தளத்தின் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.

ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்திலுள்ள எர்பில் (Erbil) பகுதியில் தங்கியுள்ள ஆயுதமேந்திய எதிர்ப்பு குழுக்களின் நிலைகள் மீது ஈரானின் ட்ரோன் பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஈரானின் புதிய தலைவராக சையத் மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், "ஒபரேஷன் ட்ரூ ப்ரொமிஸ் 4" என்ற பெயரில் ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றது.
இந்த மோதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam