ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 மட்டக்களப்பில் பணிபுரியும் விமானப்படை வீரர் ஒருவர் விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய நிலையில் கடன் பிரச்சினை காரணமாக தன்னை தானே கடத்தி காட்டுபகுதி ஒன்றில் மரத்தில் கட்டிவைத்து நாடகமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க >>> மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட விமானப்படை வீரர்
2 தற்போதுள்ள கோவிட் அபாயம் அதிகரித்தால், எதிர்காலத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டலாம் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> நாடு மீண்டும் முடக்கப்படும் அபாயம்
3 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>தலைமைப் பொறுப்பில் தொடர்ந்தும் மகிந்த!
4 ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டனர் ஆனால் ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்புள்ளதால் இந்த நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலை காணப்படுகின்றது என பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க >>>ஆபத்தினை எதிர்கொள்ளும் இலங்கை அரசியல்
5 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ச இராணுவ ஆட்சிக்குழுவின் கதை மிக விரைவில் நிறைவு பெறும் என பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> ரணிலின் முடிவு காலம் ஆரம்பம்
6 நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு சகலருக்கும் அனுமதி உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
7 இலங்கையில் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நான்கு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 5 பேர் பலியானதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க >>>அதிகரிக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்
8 சமூக ஊடக செயற்பாட்டாளர் பாத்தும் கெர்னர் கொழும்பு குற்றப்பிரிவினால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை 13 ஆம் திகதி பொல்துவ சந்திக்கு அருகில் நாடாளுமன்ற வீதிக்கு அருகில் இடம்பெற்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க >>>சமூக ஊடக செயற்பாட்டாளர் பாத்தும் கெர்னர் கைது
9 அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி அன்று வடக்கு மக்களுக்கு செய்ததை இன்று தெற்கு மக்களுக்கு செய்ய முற்பட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க >>>தமிழர்களுக்கு செய்ததை தெற்கு மக்களுக்கு செய்ய முற்பட வேண்டாம்!
10 இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 368 ரூபா 49 சதமாக பதிவாகியுள்ளது. அதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 44 சதமாக பதிவாகியுள்ளது.