ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு சகலருக்கும் அனுமதி உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அதே உரிமை உண்டு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது. அதனை தானும் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு நேற்று பிற்பகல் வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் தான் ஜனாதிபதியாக பதவியேற்றதாகவும், பொருளாதார சவால்களை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri