இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம்! 7 பேர் பலி - பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
இந்தியாவின் - பீகாரில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை (17) சுமார் 50,000 பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்த நிலையில், கோவில் வளாகத்தில் மின்சார கம்பியொன்று அறுந்து விழுந்ததால், மக்கள் அச்சத்தில் ஓடியபோது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கூட்ட நெரிசல்
இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 3 பேரை அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சிலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், பீகார் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.