உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இலக்கு! பதிவான புதிய சாதனை
2026 ஆம் ஆண்டிற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 2,402 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இலக்கில் சுமார் 61 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வரி வருவாய் வசூல் சுமார் 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட வரி வருவாய் இலக்கினை முழுமையாக அடைய முடியும் என்று திணைக்களம் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
தனிநபர் வருமான வரிக்கோப்புகள்
இதற்கிடையில், வரி வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, 1.2 மில்லியன் அல்லது சுமார் 1.2 மில்லியன் தனிநபர் வருமான வரிக்கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணிக்கையில், தாமாக முன்வந்து வரி செலுத்தப்பதிவு செய்தவர்கள் மற்றும் கட்டாயப் பதிவு மூலம் பதிவு செய்தவர்கள் ஆகிய இருவரும் அடங்குவர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
130,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தற்போது வரி செலுத்த பதிவு செய்துள்ளதாகவும், ஏனையோர் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவிக்கின்றது.
You may Like This..