இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான போதைப்பொருள் சென்னையில் பறிமுதல்!
இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த 71.24 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இந்தியாவின் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) நவம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் 69 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணை
சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி ஊடாக கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருளைக் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2026ஆம் ஆண்டில் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தனிப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.