தமிழக அரசியலில் சோகம் – கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ். பாபு காலமானார்..
தமிழ்நாடு -கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக தீவிர ஆபத்தான நிலையில் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய்
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வி.எஸ். பாபுவின் மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
வி.எஸ். பாபுவின் மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.