இலங்கையின் முக்கிய சுற்றுலா தளத்தினை பார்வையிட தற்காலிக தடை
இராவணா எல்ல சரணாலயத்தில் அமைந்துள்ள 'நில்திய பொக்குன' பகுதியைப் பார்வையிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நில்திய பொக்குன பகுதியைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு மீண்டும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
எனவே அப்பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை சில தனி நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உரிய அனுமதியின்றி நில்திய பொக்குன பகுதியை பார்வையிடுவதற்காக அழைத்து செல்வதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக உரிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.