அதிகரிக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்! இரு நாட்களில் 5 பேர் பலி
இலங்கையில் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நான்கு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 5 பேர் பலியானதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, அம்பலாங்கொட - ஊரவத்த பகுதியில் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த நபர் பலப்பிட்டிய மேல்நீதிமன்றில் வழக்கொன்றுக்காக முன்னிலையாகி மீள வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கும் நேற்றைய துப்பாக்கி சூட்டுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பதுளையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்
பதுளை – பசறை பிரதான வீதியில் ஹிந்தகொட பகுதியில் அமைந்துள்ள
ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் துப்பாக்கி சூடு
நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருக்கும், வியாரகொட பகுதியை சேர்ந்த எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த நபருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இதனை தொடர்ந்து எரிபொருளை பெற்று கொள்ள வந்த நபர் 9 மி.மி. ரகத் துப்பாக்கியால் வானத்தை நோக்கி நான்கு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் எந்தவிதமான காயங்கள் ஏற்படாத போதிலும் சந்தேகநபரை கைது செய்யும் வகையில் விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழுவின் தலைவர் உயிரிழப்பு |