துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழுவின் தலைவர் உயிரிழப்பு
கம்பஹா பாதாள உலகக்குழுவின் தலைவர்களில் ஒருவரான பஸ்பொட்டா எனப்படும் சமன் ரோஹித உயிரிழந்துள்ளார்.
இவர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக நேற்று கம்பஹா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கம்பஹா நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இவர் தாக்கப்பட்டிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
அடையாளந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலையடுத்து பாதாள உலகக்குழுவின் தலைவர் உட்பட நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் தான் வந்த வண்டியிலேயே தப்பி சென்றிருந்தார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பொலிஸ் விசாரணை
இந்த சம்பவத்தில் காயமுற்றவர்கள் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே பஸ்பொட்டா உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.