கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு: நால்வர் படுகாயம்
கம்பஹா நீதிமன்றத்திற்கு முன் அடையாளந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா பாதாள உலகக்குழுவின் தலைவர்களில் ஒருவரான பஸ்பொட்டா எனப்படும் சமன் ரோஹித என்பவர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக இன்று அழைத்து வரப்பட்டிருந்தார்.
துப்பாக்கிச்சூடு
இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்திற்குள், காரில் வந்த அடையாளந்தெரியாத நபரொருவர் ரோஹிதவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் காயமடைந்து கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலை குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேக நபர் தான் வந்த வண்டியிலேயே தப்பி சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.





மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் 43 நிமிடங்கள் முன்

ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
