உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய ஈரானிய அரசுத் தொலைக்காட்சி! கண்ணீரில் நனைந்த மினாப் நகர்
ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இஸ்லாமியக் குடியரசின் தேசியக் கொடியால் மூடப்பட்ட சவப்பெட்டிகள் பெரும் மக்கள் திரளான மக்களின் நடுவே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
160-க்கும் மேற்பட்ட கல்லறைகள்
ஒளிபரப்பின் போது, தங்களின் மகள்களை இழந்த தாய்மார்களும் தந்தையர்களும் அனுபவிக்கும் துயரத்தை விவரிக்கும் குரல்விளக்கம் ஒலிபரப்பப்பட்டது.

மேலும், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 160-க்கும் மேற்பட்ட கல்லறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த பெண்கள் பள்ளி, முன்பும் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் Islamic Revolutionary Guard Corps (IRGC) தளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இதுகுறித்து US Central Command (Centcom) சம்பவம் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை, Israel Defense Forces (இஸ்ரேல் பாதுகாப்புப் படை) அந்தப் பகுதியில் எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளது.
இறுதிச் சடங்கு
தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதலில் பலியான 165 பேரின் கூட்டு இறுதிச் சடங்கு, ஒட்டுமொத்த ஈரானையும் ஒருசேர இணைத்துள்ளது.
தெற்கு ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில், டஜன் கணக்கான மாணவர்கள் உட்பட குறைந்தது 165 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் ஈரான் மக்களிடையே ஆறாத வடுவாக மாறியுள்ளது. இஸ்ரேல் அல்லது அமெரிக்காவினால் நடத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, மினாப் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட இறுதிச் சடங்கில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.
இஸ்ரேலின் தாக்குதல்
அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மட்டுமின்றி, மாற்றுக் கருத்துடையவர்களும் இச்சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஜனாதிபதி பெசேஷ்கியான் (Pezeshkian) இச்சம்பவம் குறித்துப் பேசுகையில், எந்தவொரு நாடும் அல்லது குழந்தைகளும் இத்தகைய துயரத்தை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் இலக்குகள், வெறும் இராணுவ நிலைகளை மட்டும் நோக்கியவை அல்ல என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது ஈரான் நாட்டின் இராணுவ வசதிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஈரான் மக்கள் மீதான போர் என்றும் அவர் சாடினார். இந்தத் துயரம் தற்போது ஈரானில் ஒரு பெரும் தேசிய சோகமாக மாறியுள்ளது.
மேலதிக தகவல்- அமல்