இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் - சீனா வலியுறுத்து
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இராணுவத் தாக்குதல்களுக்கு சீனா தனது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது, இப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் மட்டுமே சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்று கூறிய வாங் யி, ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்கள் அந்த செயல்முறையைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், போர் மேலும் பரவாமல் தடுக்கவும், நிலைமை கைமீறிப் போவதைத் தவிர்க்கவும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri