இந்தியாவின் கட்டுப்பாட்டில் கட்டுநாயக்க விமான நிலையம் : நெருக்கடியில் ரணில் அரசு
இலங்கையில் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்தல், நிர்வகித்தல் மற்றும் செயற்படுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியா தயாரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இந்திய முதலீடுகளின் முக்கியத்துவம் குறித்து விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சு
கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை வெளிவிவகார அமைச்சு ஊடாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையின் விமான நிலையங்களில் இந்தியா மேற்கொள்ளும் குறிப்பிட்ட பணிகளை இந்தியா குறிப்பிடவில்லை.
இதுவொரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
