யாழ். பல்கலைக்கழகத்தில் பறக்கவிடப்பட்டுள்ள கறுப்புக்கொடி
இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, கறுப்பு தினப் பேரணியை முன்னெடுக்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், சுதந்திர தினமான இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04.2.2024) நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றது.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சுழலில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சி - இரணைமடு சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை நடைபெறும் கரிநாள் பேரணியில் பங்குகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் பகுதிகளில் சுதந்திரம் கரி நாளாக பிரகடனப்படுத்தி கறுப்புக்கொடி கொடிகள் பறக்கவிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: பிரதீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |