வடக்கில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்: 5 பேருக்கு தடை உத்தரவு
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 5 பேருக்கு பொலிஸாரால் தடை பெறப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (4.2.2024) கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயற்பாட்டாளர்களான லீலாதேவி, கலாரஞ்சினி, கோகிலவாணி மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் அடங்கலாக ஐவருக்கு எதிராகவே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீதிமன்றில் குறித்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து, ஒலி மாசுபடல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி குறித்த தடை பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
ஆயினும், திட்டமிடப்பட்ட வகையில் குறித்த போராட்டம் இரணைமடு சந்தியில் 9 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
