76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு: தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டது தேசிய கீதம்
இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் கொழும்பு - காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
'புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
பிரதம விருந்தினர்
இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்கின்றார்.
சுதந்திர தின விழாவைப் பல்வேறு கலை நிகழ்வுகள் அலங்கரிக்கவுள்ளன. முப்படைகளின் அணிவகுப்புகளும் கோலாகலமாக இடம்பெறவுள்ளன. மரியாதை அணிவகுப்பிப்பில் இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 3 ஆயிரத்து 461 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இராணுவ அணிவகுப்பு
ஆயுதம் தாங்கிய வாகனங்கள் உள்ளிட்ட 69 வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. விமானப் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 19 விமானங்களும் இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளன.
7 ஹெலிக்கொப்டர்கள், 16 ரக 5 விமானங்கள், 3 ஜெட் விமானங்கள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
இலங்கைக் கடற்படையின் 1009 உறுப்பினர்களும் இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்ட அணிவகுப்பில் இணையவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
