நாடு முழுவதும் இன்று விசேட விடுமுறை! பேருந்து, ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
தொடர்ந்து நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை அளிக்க அராங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த விடுமுறை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறைக்கும் பொருந்தும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கும் இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள்
எனினும், சுகாதாரம், துறைமுகங்கள், நீர் மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறப்பு விடுமுறை காரணமாக இன்றைய தினம், சனிக்கிழமைகளில் இயக்கப்படவுள்ள ரயில்களை மட்டுமே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்ககளம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பிரதான வழித்தடத்தில் 29 ரயில் பயணங்களும், வடக்கு ரயில் வழித்தடத்தில் 17 பயணங்களும், கடலோர வழித்தடத்தில் 33 பயணங்களும் இயக்கப்பட உள்ளன.
நாடு முழுவதும் பேருந்து
களனிப் பள்ளத்தாக்கு வழித்தடத்தில் 5 ரயில்களையும், புத்தளம் வழித்தடத்தில் 9 ரயில்களையும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை வழித்தடங்களில் 6 ரயில்களையும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் பேருந்துகளைத் திட்டமிட்டபடி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
உரிய பேருந்து சேவைகளுக்கான கால அட்டவணையை குறிப்பிட்ட நேரங்களில் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எந்த நேரத்திலும் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri