இந்தியர்களுக்கு ஆறு மணி நேரம் அவகாசம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையே இன்று 7ஆவது நாளாக போர் நடந்து வருகின்றது.
உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள் ஒரு சில பகுதிகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
உக்ரைனின் தலைநகரான கீவ் நகரை முழுமையாக கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைன் - கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற 6 மணி நேரம் கால அவகாசம் தரப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
The Russians apparently agreed to a six hour window for allowing safe passage to all Indians in Kharkiv before an all-out assault begins tonight . The deadline is 2130 IST, about 3 hours from now. #UkraineWar
— Nitin A. Gokhale (@nitingokhale) March 2, 2022
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
எனவே, பாதுகாப்பு கருதி கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகமும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை,இன்று இரவு கார்கிவில் பயங்கர தாக்குதல் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
ஆப்கானிஸ்தானில் சரிந்ததை உக்ரைனில் மீட்டது அமெரிக்க உளவுத்துறை
உக்ரைன் ஜனாதிபதியை உலகத் தலைராக்கிய புடின்! போர் தொடுத்து மாட்டிக்கொண்ட ரஷ்யா?
நேட்டோ பதிலடி கொடுக்காது என தவறாக நினைத்த புடின்! அமெரிக்க ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை
மோசமடையும் ரஷ்யா நிலவரம்! புடினால் ஆபத்தான நிலையில் பலர்

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
