தியாக தீபம் திலீபனின் தியாகங்கள் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்படவேண்டும்: சரவணபவன் (Photos)
தியாக தீபம் திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படாமல் அவரின் தியாகங்கள் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று(26.09.2023) மட்டக்களப்பில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வில் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நடாத்தியுள்ளனர்.
சிறப்பு உரைகள்
இந்நிகழ்வானது மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜோசப்மேரி தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன் போது தியாகதீபன் திலீபனின் தியாகம் குறித்த சிறப்புகள் உரைகளும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி,சிவில் சமூக செயற்பாட்டாளர் லவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos)




