திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video)
திருகோணமலையில் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு நீதிமன்ற தடை உத்தரவை மீறியும் பொலிஸாரின் தடை விதிப்பை மீறியும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வானது இன்று (26.09.2023) தமிழ் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், திருகோணமலை - தபால்கந்தோர் வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி நினைவு கூரப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்றத்தினால் பொது அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பேருக்கு பொலிஸார் தடை உத்தரவு கடிதத்தை வழங்கிய போதும் தடையாளர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் இந்த நிகழ்வை நடாத்தியதுடன் நீதிமன்ற தடை உத்தரவை பாதுகாக்கும் வகையில் பெரும்தொகையான பொலிஸார் குவிக்கபட்டிருந் போதும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் முன்னாள் போராளிகளின் உறவினர்களும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி மலர்கள் தூவி மேற்படி நினைவேந்தலை மேற்கொண்டனர்.
நீதிமன்ற தடை உத்தரவு
திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குளக்கோட்டன் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றபோதும் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் வாகனங்கள் குவிக்கப்பட்டு இருந்தன.
திருகோணமலை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு பொலிஸ் அதிகாரி ஒருவரால் வாசிக்கப்பட்துடன், நீதிமன்ற கட்டளைக்கு அமைய 1979ஆம் 15ம் இலக்க குற்றவியல் பிரிவு 106/1 பிரகாரம் ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் தியாகி
திலிபனை நினைவுகூரும் வகையில் நினைவுகளை நடாத்துவது சிங்கள, முஸ்லிம்,தமிழ்
இனங்களுக்கு இடையே முரண்பாட்டினை உருவாக்கி தேசிய ரீதியில் இனக்கலவரங்களை
உண்டாக்க வழிவகுக்கும் என்பதால் இதுபோன்ற நினைவு கூரல் போராட்டங்கள்
ஆர்பாட்டங்கள் தடைசெய்ய வேண்டும் என்ற நீதிமன்ற கட்டளைக்கு அமைய
தடை விதிக்கின்றோம் என அத்தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் திருமலை தமிழ் தேசிய பேரவை தலைவர் ஜெரோம் உறுப்பினர் ரமேஸ் நிக்கலஸ் மூதூர் மாற்றுத்திரனாளி சங்க தலைவர் சுஜிதபிரியா, ஜனதா பெரமுன ஒன்றிய தலைவர் கிருஸ்னபிள்ளை பிரசாந் மற்றும் கந்தையா காண்டீபன் ஆகியோருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
[IZ9IS ]
இரண்டாம் இணைப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவு இன்றைய தினம் (26.09.2023) திருகோணமலை - குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் நடத்தப்படவிருந்த நிலையில், திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.
திருகோணமலை துறைமுக பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜே.எஸ்.ரணவீரவினால் 1979 ஆம் ஆண்டு 15 ம் இலக்க 106/1 என்ற நிபந்தனைக்கு அமைவாக திருகோணமலை நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
நினைவு நாள் அனுஷ்டிபதற்கு தடை
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனின் நினைவு இன்றைய நாள் கொண்டாடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் முரண்பாடுகள் ஏற்படலாம் என பொலிஸார் ஐந்து அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரஸ்ஸாக், துறைமுக பொலிஸார் வழங்கிய அறிக்கையை கவனித்துக் கொண்டு திலீபனின் நினைவு நாள் அனுஷ்டிப்பதற்கு தடை உத்தரவு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர். எம்.ஜெரோம் மற்றும் ரமேஷ் நிக்கலஸ் உட்பட ஆறு பேருக்கு தடை உத்தரவு வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
