யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (26.09.2023) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தலில், கலைபீட நான்காம் வருட மாணவன் தீபன் நினைவுதின உரையினை நிகழ்த்தியிருந்தார்.
நினைவாக மரக் கன்றுகள்
தியாக தீபம் திலீபன் இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து, 12 நாட்கள் நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணா விரதம் இருந்து இதே நாளில் மு.ப 10.48 மணியளவில் இவ்வுலகை விட்டு நீக்கினார்.
அந்தவகையில் அவர் இவ் உலகை விட்டு நீங்கிய நேரத்திற்கு இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு, சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தியாக தீபத்தின் நினைவாக மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமார் மற்றும் விஞ்ஞானபீட
மாணவர் ஒன்றிய தலைவர் ச.அபிறஷன் உள்ளிட்டவர்களின் பங்குபற்றலுடன்
பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா
ஊழியர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
மேலதிக தகவல் : தீபன்
இரண்டாம் இணைப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
தியாகி திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தாயகமெங்கும் உணர்ச்சியுடன் நடைபெற்று வரும் நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று (25.09.2023) மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்
அதன்போது, யாழ். நகர் பகுதி, மருதனார்மடம் சந்தை பகுதி மற்றும் நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |