நாடு முழுவதும் முடங்கியுள்ள 17 திட்டங்கள்: அமைச்சர் வெளிப்படுத்தியுள்ள தகவல்
நாடு முழுவதும் 17 திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், அவற்றை மீண்டும் தொடங்க 59 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அம்பாறை பொது மருத்துவமனையில் சமீபத்தில் தடைப்பட்ட இரண்டு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இரண்டு மடங்கு செலவு
அவர் மேலும் தெரிவிக்கையில், திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கப்படாததால், அவற்றை முடிக்க அரசாங்கம் அசல் மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு செலவிட வேண்டியிருக்கும்.
மீள ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களில் அம்பாறை மருத்துவமனைக்கான புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வக அலகு வளாகம் என்பன அடங்கும்.
இதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான செலவு ஆரம்பத்தில் ரூ. 873 மில்லியன் என மதிப்பிடப்பட்டு, தற்போது அதன் செலவு ரூ. 1589 மில்லியனாக அதிகரித்துள்ளது.
செலவு அதிகரிப்பு
மற்றைய திட்டத்துக்கு அசல் மதிப்பீடு ரூ. 354 மில்லியன், திட்டத்தை முடிக்கும் போது அதன் செலவு ரூ. 720 மில்லியன் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை மீண்டும் தொடங்க 59 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



