விகாராதிபதியின் வங்கிக் கணக்கில் 28 மில்லியனுக்கும் அதிகமான பணம் - சிக்கிய நால்வர்
பாணந்துறையில் உள்ள ஒரு பிரபலமான விகாரையின் விகாராதிபதியின் வங்கிக் கணக்கில் இருந்து 28 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடியாக எடுத்த சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பிரதேச சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா, ஜா-எல, மினுவாங்கொட மற்றும் ஏகல ஆகிய பகுதிகளை சேர்ந்த 33, 34, 45 மற்றும் 46 வயதுடைய நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அடையாள அட்டை
பாணந்துறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தேரர் தனது கணக்கை பராமரித்து வருகிறார். மேலும் அவரது அடையாள அட்டை சிறிது காலத்திற்கு முன்பு காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அதே வங்கியின் நாரம்மல கிளையில் பல சந்தர்ப்பங்களில் தங்கள் கணக்குகளுக்கு பணத்தை மாற்றியதாகவும் பணத்தைப் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam

அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
