போராட்டத்தின் பின் பொலிஸாருடன் முரண்பட்ட அர்ச்சுனா
கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காரை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம்(22.09.2025) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri