மித்தெனிய தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கிகள் : அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்
மித்தெனியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியசாலையில் இருந்த தங்க முலாம் புசப்பட்ட T56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்கள் வெள்ளவத்தை - ஹேவ்லொக் சிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முலாம் புசப்பட்ட T56 துப்பாக்கி தொடர்பில் ஒற்றுமை இருக்கிறதா என்பதில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆயுதம், பின்னர் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரிக்கப்பட்டு வருகிறது, முன்னாள் அமைச்சர் மற்றும் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆயுதக் களஞ்சியம் கண்டுபிடிப்பு
மித்தெனியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட T56 தோட்டாக்களில், 'K.P.I' என்ற எழுத்துக்கள் குறிக்கப்பட்டிருந்தது.
இந்த அடையாளங்கள் கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடைய குறியீடுகள் ஆகும்.
'K.P.I' என்பது பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி காஞ்சிபாணி இம்ரானுடயது என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மித்தெனியவுக்கு அழைத்து வரப்பட்டதை அடுத்து இந்த ஆயுத களஞ்சியம் கண்டுபிடிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam

அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
