வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரஷ்யா விடுத்துள்ள மிரட்டல்
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஸ்யா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகின்றது.
ரஷ்யாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த Toyota, Volkswagen, Jaguar, Land Rover, Mercedes-Benz, Ford, BMW ஆகிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும் ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில், குறித்த வெளிநாட்டு நிறுவனங்கள் தமது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷ்யா பகிரங்கமாக மிரட்டியுள்ளது.
ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த மிரட்டல் உலக நாடுகளை அச்சமடைய செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்....
போரினால் 100 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை இழந்துள்ள உக்ரைன்
உக்ரைனில் சிறுவர்கள் மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்ய படைகள் தாக்குதல்