இத்தாலிக்கு செல்லும் சர்ச்சைக்குரிய அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத் துறை
இத்தாலியில் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு, அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத் துறை தனது முகவர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு இத்தாலிய அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் கடந்த சில நாட்களில் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத் துறை முகவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், அதே முகவர்களை இத்தாலியத் தெருக்களில் அனுமதிப்பது பாதுகாப்பானது அல்ல எனப் பலரும் கருதுகின்றனர்.
பாதுகாப்பு முறைகள்
"இது மக்களைக் கொல்லும் ஒரு ஆயுதக் குழு (Militia). மிலன் நகரத்திற்குள் நுழைய இவர்களுக்கு அனுமதியில்லை" என்று மிலன் மேயர் பெப்பே சாலா (Beppe Sala) மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க முகவர்கள் இத்தாலியின் ஜனநாயக ரீதியான பாதுகாப்பு முறைகளுக்கு உட்பட்டு நடப்பார்கள் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கண்டனங்களுக்குப் பதிலளித்துள்ள அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத் துறை நிறுவனம், தங்களது முகவர்கள் இத்தாலியில் குடியேற்றச் சோதனைகளை நடத்தப்போவதில்லை என்றும், சர்வதேசக் குற்றக் கும்பல்களின் அச்சுறுத்தல்களைக் கண்டறிய மட்டுமே அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்குத் துணையாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளது.

மேலும், அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இத்தாலிய அதிகாரத்தின் கீழேயே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் முதலில் இது ஒரு சாதாரண விடயம் என்று இத்தாலிய உள்துறை அமைச்சர் மேட்டியோ பான்டெடோசி கூறியிருந்தாலும், எதிர்ப்பு வலுத்தது.
இதைத் தொடர்ந்து, "அமெரிக்க முகவர்கள் இத்தாலிய மண்ணில் நேரடியாகச் செயல்பட மாட்டார்கள்" என்று உறுதி அளித்துள்ளார். எனினும் அரசாங்கம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்குப் பணிந்து போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam