ஈரான் பாடசாலை மீதன் தாக்குதல் : விசாரணை நடத்த அதிகாரியை நியமித்தது அமெரிக்கா
ஈரான் மீதான போரின் முதல் நாளில், அந்நாட்டிலுள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்கா நடத்தி வரும் விசாரணையின் தற்போதைய நிலை தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் (Hegseth) பதிலளித்தார்.
அமெரிக்கப் படைகளே காரணம்
அப்போது, இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் (CENTCOM), வெளிப்படையான விசாரணை அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாகத் தெரிவித்தார்.

“இந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் முழுமையாக ஆராயும் வகையில், ஒரு ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரியை சென்ட்கோம் (CENTCOM) நியமித்துள்ளது.
இந்த விசாரணை அதிகாரி சென்ட்கோம் அமைப்பிற்கு வெளியே உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைக்கு எவ்வளவு காலம் தேவைப்படுமோ அவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளப்படும்” என்று ஹெக்செத் கூறினார்.
இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கப் படைகளே காரணம் என்று ரொய்ட்டர்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இந்த அதிகாரப்பூர்வ விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 8 மணி நேரம் முன்
அக்கினி களம் காணும் இந்துக்களின் மாபெரும் விவாத சமர் " சொல்லாடல் 2026" - யார் வெல்லப் போகிறார்கள்..!
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்