அனோஜனுக்கு தீர்ப்பின் பின் சவூதியில் நடக்க போவது என்ன - கையை விரித்த அரசாங்கம்!
சவூதி நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞன், தனது முகப்புத்தக பதிவால் அந்நாட்டில் அண்மையில் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
முகம்மது நபிகள் தொடர்பில் அவர் ஒரு தவறான கருத்தை முகப்புத்தகத்தில் முன்வைத்த நிலையில், இத்தண்டனையை அந்நாடு அவருக்கு வழங்கியது.
இருப்பினும், குறித்த இளைஞன் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அதை உணர்ந்து நீக்கியிருந்தார்.
பின்னர், இது குறித்து அனைத்து இஸ்லாமியர்களும் தன்னை மன்னிக்குமாறும் அவர் கோரி ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார்.
ஆனால், அக்கருத்துப் பகிர்வை பகிர்ந்த பலர் அவருக்கு தண்டனை வழங்குமாறு தொடர்ந்து கோரி வந்த நிலையில் சவூதி அரசாங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில், அவரை விடுதலை செய்ய உதவுமாறு தமிழ் மக்கள் பலரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,