சமூக பிரச்சினைகளை பாடல்களில் வெளிப்படுத்தியதால் அச்சுறுத்தல் : வெளிப்படுத்தப்பட்ட ஆதங்கம்
சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக யாழ்ப்பாணத்திலிருந்து பல பாடல்களை இசையமைக்கும் இசையமைப்பாளர் பூவன் மதீசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 30 வருடகால யுத்தம் முடிவடைந்து மக்கள் தங்களது வாழ்க்கையை சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் இன்னமும் மக்களுக்கு ஒரு ஏமாற்றம் இருந்து கொண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு காலமும் இருந்த தமிழ் அரசியல் கட்சிகளால் சாதிக்க முடியாதததை சமூக பிரச்சினைகளை பாடல்களின் வாயிலாக கூறும் இவர்களால் செய்யமுடியுமா என்ற ஏக்கம் காணப்படுகிறது.
ஆகவேதான் இதை அடுத்த தலைமுறைக்கு பாடல்கள் வாயிலாக தாம் கொண்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விடயங்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்......