ஈரான் இராணுவ தலைவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் இராணுவத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி பேசுகையில், ஈரானிய இராணுவமும் ஈரானிய புரட்சிகர காவல்படையும் (IRGC) இணைந்து எத்தகைய எதிரி நடவடிக்கையையும் முறியடிக்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
இரும்புக் கேடயமாக செயற்படும் படைகளுக்கு இடையிலான ஒற்றுமை
இரு படைகளுக்கும் இடையிலான ஒற்றுமை, நாட்டின் எதிரிகளின் சதித்திட்டங்களிலிருந்து பாதுகாக்கும் "இரும்புக் கேடயமாக" செயல்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, IRGC தளபதி மேஜர் ஜெனரல் அகமத் வஹீதி தெரிவிக்கையில், எதிரி நாடுகள் ஈரானின் இராணுவ திறனை குறைவாக மதிப்பிட்டு பின்னர் தங்கள் தவறை உணர்ந்து கொண்டதாகக் கூறினார்.
ஈரானிய இராணுவமும் IRGCயும் அமெரிக்க ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் பலத்த அடிகளைக் கொடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.