பிரகீத் எக்னெலிகொட வழக்கில் திருப்பம் - விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சுரேஷ்குமாரின் அதிர்ச்சி சாட்சியம்
அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்பிலிருந்து பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் பல முக்கிய விடயங்களை சாட்சிகளாக தெரிவித்திருக்கின்றார்.
அவர் தனது வாக்குமூலத்தில், ஜூலை 15ஆம் திகதி மதிய உணவு வேளையில் முகத்தை மூடிய சுமார் 15 பேர் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து மறுநாள் காலை சிறை அதிகாரிகள் இல்லாமல் கைதிகளே உணவை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பின்பு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கைதிகள் தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்த நீர்கொழும்பு கலவரம் குறித்து இன்னும் சிலர் சாட்சியங்களாக மாறி தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான பல முக்கிய சாட்சியங்களின் பதிவுகளை கொண்டு வருகிறது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..