சர்ச்சைக்குரிய பாடசாலை மாணவனின் காணொளி : அமைச்சர் நளிந்தவின் விசேட அறிவிப்பு
கொழும்பின் பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் மற்றும் ஆசிரியர்களின் மோசமான செயற்பாடுகள் தொடர்பான காணொளி தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27.01.2026) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்கால நடவடிக்கை
ஒரு அரசாங்கமாக, இதுபோன்ற பிரச்சினைகளைப் நோக்கும் போது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் தனிமனித உரிமையயை இலக்காகக் கொண்ட அந்தரங்க விடயங்களை பரப்புவது குறித்த நபர்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.அதனால் இங்கே சரி, தவறு எது என்பதை முடிவு செய்வது எங்கள் வேலை அல்ல.
நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அப்பால், தனிப்பட்ட விடயங்களை இலக்காகக் கொண்ட இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக, ஒரு அரசாங்கமாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்காலத்தில் ஒரு முறையான திட்டத்தை செயல்படுத்த வேண்டியுள்ளது.

இது எமது சமூகத்தின் ஒழுக்கச் சீர்கேட்டின் பாரிய சரிவைக் காட்டுகிறது. மனிதகுலத்தின் கடுமையான சீரழிவு மற்றும் ஒரு உயரிய சமூகமாக நாம் எங்கிருக்க வேண்டும் என்பதை இது எடுத்து காட்டுகிறது.
இது சமூகத்தில் நிழவும் மோசமான செயலை வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்கம் இதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri