அமைச்சர் நளிந்தவுக்கு தெரிந்த இரகசியங்கள் : வைத்தியர் ருக்சான் பெல்லனவின் அதிர்ச்சித் தகவல்
தரமற்ற மருந்து இறக்குமதி மற்றும் மருந்து மாபியா தொடர்பில் தற்போதைய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் அறிவார் என வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்துள்ளார்.
குற்றவியல் விசாரணைகள் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த வைத்தியர் ருக்சான் பெல்லன விசாரணைகள் முடிவடைந்து வெளியில் வந்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
அமைச்சருக்கு தெரிந்தே நடக்கும் விடயங்கள்
அவ்வாறு தெரியாது என்றால் ஏன் 65 வயதான ஒருவரை அமைச்சின் செயலாளராக இன்றும் வைத்துக் கொண்டுள்ளார். மருந்து மாப்பியா சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் இதற்கு சம்பந்தமில்லை.இதை நான் தொடர்ந்து கூறிவருகிறேன்.இதற்கு முன்னர் அமைச்சர் ராஜித சேனாரத்தின இருக்கும் போது கூட மருத்து மாப்பியா இருந்தது.

ஆனால் அவருக்கு தெரியாது.நாங்கள் சொன்னோம் ஆனால் அவர் அதை நம்பவில்லை. இன்று நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலையை பாருங்கள்.2017 ஆம் ஆண்டு முதல் நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்துகளே உள்ளன.
கொவிட் காலத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் எமது அமைச்சின் அதிகாரிகள் தேவையில்லை என்றனர்.அதில் கொவிட் தீவிரமாக பரவியது.

கொவிட்டின் போது ஏற்பட்ட மரணங்களை அதாவது முஸ்லிம் சடலங்களை எரிப்பதற்கு ஆணையிட்ட அதிகாரிகளே இன்று மருந்து மாபியாவால் அமைச்சின் உயர் பதவிகளில் இருத்தப்பட்டுள்ளனர்.அது அப்படியென்றால் இந்த நாட்டுக்கும் அதே கதிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam