எப்ஸ்டீன் விவகாரத்தைக் கொண்டு அமெரிக்காவை கிண்டல் செய்த ஈரான்
ஈரான் தலைவர்கள் "எலிகளைப் போல" ஒளிந்து கொண்டிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறிய கருத்துக்கு, ஈரானின் தேசிய பாதுகாப்பு பிரிவு பிரதானி அலி லாரிஜானி (Ali Larijani) தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், ஈரான் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் தலைமறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் அதிபர் பெசெஷ்கியன் (Pezeshkian) உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுப் பேரணியில் மக்களுடன் கலந்து கொண்டதை லாரிஜானி சுட்டிக்காட்டினார். தமது எக்ஸ் (X) தளத்தில் இது குறித்து லாரிஜானி பதிவிட்டுள்ளார்.

"மிஸ்டர் ஹெக்செத்! எங்கள் தலைவர்கள் எப்போதும் மக்களுடன் இருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் தலைவர்கள்? அவர்கள் எப்ஸ்டீனின் தீவில் இருந்தார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையிலேயே மரணமடைந்த பெரும் பணக்காரர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவருடன் அமெரிக்காவின் பல செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 'எப்ஸ்டீன் தீவு' விவகாரத்தைக் குறிப்பிட்டு, லாரிஜானி அமெரிக்கத் தலைவர்களின் ஒழுக்கநெறியைக் கேலி செய்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், லாரிஜானியின் இந்த கடுமையான விமர்சனம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri