எதிரிகளை கொலை செய்வோருக்கு பரிசு - முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள உக்ரைன்
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது.
இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில்,போரை உடனடியாக நிறுத்திவிட்டு இராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யா தரப்புக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.
சண்டையை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்த நிலையில்,தொடர்ந்தும் கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷ்யா பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் நுழைந்துள்ள எதிரிகளை கொலை செய்வோருக்கு 300 டொலர் பரிசு வழங்கப்படும் என செர்னிஹிவ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், இராணுவ டாங்கிகளை கொண்டு வந்தால் 2,50,000 உக்ரைன் பணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா! தரைமட்டமான உக்ரைனின் வரலாற்று சிறப்புமிக்க அரச கட்டடம்
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி
உக்ரைனின் புதிய தாக்குதல் உத்தியால் திணறும் ரஷ்ய இராணுவம்

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
