உக்ரைனின் புதிய தாக்குதல் உத்தியால் திணறும் ரஷ்ய இராணுவம்
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்றை கையாண்டு வருவதாக கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது, ட்ரோனி ரக தாக்குதல் முறையொன்றை உக்ரைன் முயற்சித்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
நிச்சயமாக. உக்ரைன் தன்னுடைய இராணுவ வலுவை பெருக்குவதற்காக துருக்கியிடமிருந்து ட்ரோனி ரக படை கட்டுமானமொன்றை ஏற்கனவே வாங்கியிருந்தது. அதை அவர்கள் முதல் தடவையாக இந்த களத்தில் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். அதில் கணிசமான வெற்றியையும் கண்டிருக்கிறார்கள்.
ட்ரோனி என்றால் ஒரு கண்காணிப்பாக பயன்படுத்தப்படுகின்றன பொறிமுறை என்று தான் எம்மில் பலருக்கு தெரியும். ஆனால் ட்ரோனியை பயன்படுத்திய ஒரு போரியல் முறைமையும் சமீப காலங்களாக களத்தில் இருக்கிறது என்பது தான் உண்மை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,