வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா! தரைமட்டமான உக்ரைனின் வரலாற்று சிறப்புமிக்க அரச கட்டடம்
உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய படைகள் 6 ஆவது நாளாக தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் அரசு கட்டடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதலை ரஷ்யா அதிகரித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ், அந்நாட்டின் 2வது பெரிய நகரான கார்கிவ், செர்னி உள்ளிட்ட குடியிருப்புகள், கட்டடங்கள் நிறைந்த நகரங்களில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
அரசு கட்டடங்களை குறிவைத்து பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த தாக்குதல் சம்பவமானது அங்கிருந்த கமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
இந்த கட்டிடமானது “சுதந்திர சதுக்கத்தின் விளிம்பில் அமர்ந்திருக்கும் நகரின் மையத்தில் உள்ள கார்கிவின் வரலாற்று சிறப்புமிக்க அரசாங்க தலைமையகம்” என்று உக்ரைனில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஒருவர் அடையாளப்படுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி
உக்ரைனின் புதிய தாக்குதல் உத்தியால் திணறும் ரஷ்ய இராணுவம்
உக்கிரமடைந்த உக்ரைன் போர்க்களம்! ஐந்தாயிரம் ரஷ்ய படையினர் பலி - 200 பேர் கைது





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
