உக்கிரமடைந்த உக்ரைன் போர்க்களம்! ஐந்தாயிரம் ரஷ்ய படையினர் பலி - 200 பேர் கைது!(நேரலை)
நாட்டில் முதல் ஐந்து நாட்களில் இடம்பெற்ற தீவிரமான சண்டையில் 5,710 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரையன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அத்துடன், 200 க்கும் மேற்பட்ட ரஸ்ய வீரர்கள் உக்ரைனியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
198 ரஸ்ய தாங்கிகள், 29 விமானங்கள், 846 கவச வாகனங்கள் மற்றும் 29 உலங்கு வானுார்திகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்கள் சரியானவையா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும் உக்ரைன் மீதான அதன் படையெடுப்பின் போது மொஸ்கோவின் படைகள் பெரும் இழப்பை சந்தித்ததாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் நம்புகிறது.
தமது தரப்பில் படையினர் கொல்லப்பட்டமையை ரஸ்யா ஏற்றுக்கொண்டபோதிலும் எண்ணிக்கையை வெளியிடவில்லை.
பொதுமக்கள் மீது தாக்குதல்கள்! போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகப் போகும் ரஷ்யா!
உக்ரையின் கார்கிவ் பகுதியில் உள்ள விளாடிமிர் புட்டினின் படைகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டிரக் ஏற்றப்பட்ட பீரங்கி அமைப்பு ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவமுடியும்.
இந்தநிலையில் ரஸ்யா பொது மக்கள் வாழும் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் மத்தியில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
Barbaric Russian missile strikes on the central Freedom Square and residential districts of Kharkiv. Putin is unable to break Ukraine down. He commits more war crimes out of fury, murders innocent civilians. The world can and must do more. INCREASE PRESSURE, ISOLATE RUSSIA FULLY! pic.twitter.com/tN4VHF1A9n
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 1, 2022
இந்த உயிரிழப்புகளை அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தின் நிர்வாக அலுவலகம் மீது நடத்தப்பட்ட ரஸ்யர்களின் தாக்குதலில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
ஜெனீவா உடன்படிக்கையின் கீழ், ஆயுத மோதலின் போது வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைப்பது போர்க்குற்றமாக கருதப்படுகிறது.
உக்ரைன் போர்க்களத்தின் 6 ஆம் நாளில், ரஷ்யர்கள் எதிர்வரும் மணித்தியாலங்களில் அதிக வலிமையுடன் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிப்பார்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உக்ரைனிய பாதுகாப்புக்கு எதிராக ரஷ்யா தனது வலிமையை மறுசீரமைப்பதால், போர்க்களத்தில் சிறிது மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் (வடமேற்கு) மீது கடந்த 48 மணி நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
ரஷ்யப் படைகள் இப்போது குழாய் மற்றும் பீரங்கி ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன.
இவை மிகவும் அதிகமான பொதுமக்களின் இறப்புக்களையும் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன.
கார்கிவில் இதுவரை பலர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரஷ்ய படையினர் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் ஆயுதம் அல்லது வெற்றிட வெடிகுண்டுகளே பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தெற்கு உக்ரைனில் போரின் முதல் நாட்களில் இருந்து ரஷ்ய படைகளின் முன்னேற்றங்கள் தற்போது குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் சபோரிஷியா மீது தீர்மானமான தாக்குதல்களை ரஸ்யா நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தலைவராக ரஷ்யாவின் மாதாந்த பதவிக்காலம் முடிவடைந்ததை உக்ரைனின் துாதுவர் செர்ஜி கிஸ்லிட்சியா வரவேற்றுள்ளார்.
சபையின் தலைவர் பதவி ஒவ்வொரு மாதமும் உறுப்பினர்கள் மத்தியில் சுழற்சி முறையில் பதவி வகிக்கின்றனர்.
இதன் அடிப்படையில் பெப்ரவரியில் ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா, சபைக்கு தலைமை தாங்கினார்.
இந்தநிலையில், இந்த அருவருப்பான பேரவைத் தலைவர் இருக்கையின் ஆக்கிரமிப்பு முடிவடையும் நள்ளிரவை தாம் எதிர்பார்ப்பதாக கிஸ்லிட்சியா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள். பாதுகாப்பு சபையின் அதிகாரங்களில் நாடுகள் மத்தியில், அமைதி காக்கும் நடவடிக்கைகளை நிறுவுதல், சர்வதேச தடைகளை அமுல்படுத்துதல் மற்றும் இராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குதல் ஆகியவை அடங்குகின்றன.
இதனையடுத்து மீட்புப் பணியாளர்களும் தன்னார்வலர்களும் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.உக்ரெய்னின் வடகிழக்கு நகரமான Okhtyrka மீது நடத்தப்பட்ட ரஷ்ய பீரங்கி தாக்குதலில் 70 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் காரணமாக இறந்த பலரின் உடல்கள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருவதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.
உக்ரேனிய படையினரின் எறிகனை தாக்குதலால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள்!
கிழக்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதிகளில் உக்ரேனிய படையினரின் எறிகனை தாக்குதலால் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரஸ்ய மொழி பேசும் இந்த மாகாணத்தில் உள்ள வீடுகளின் இடிபாடுகள் எரிந்த சிற்றூந்துகள்; தெருக்களில் காணப்படுகின்றன.
திங்களன்று, டொனெட்ஸ்க், ஹார்லிவ்கா நகரங்களின் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலின் போது இறந்த இரண்டு ஆசிரியர்களுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தப்பட்டன.
“உக்ரையன் போர்க் களம் 6வது நாள்” ரஸ்ய படைகளின் தாக்குதல் ஆரம்பம்!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஸ்ய ராணுவம் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் “கியேவைச் சுற்றியுள்ள சூழ்நிலை தொடர்ந்து பதற்றமாக உள்ளது" என்று உக்ரைய்ன் இராணுவம் எச்சரித்துள்ளது.
"எதிரி தாக்குதல் திறனை இழந்தாலும், இராணுவம் மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீது அவர் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூடு நடத்துகிறான்" என்று உக்ரைய்ன் இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஸ்யா “பெலாரஸ் குடியரசின் உயர் பயிற்சி பெற்ற இராணுவப் பிரிவுகளுடன் சேர திட்டமிட்டுள்ளது" என்றும், பெலாரஸின் வான்வெளியை அதன் இராணுவ விமானப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தவும் ரஸ்யா திட்டமிட்டுள்ளது என்றும் உக்ரைய்ன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ரஸ்ய துருப்புக்கள் தெற்கில் மைகோலைவ் மற்றும் நியூ ககோவ்கா இடையே உள்ள கெர்சன் நகரத்தின் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிரிகள், விமான நிலையத்திலிருந்து Nமைழடயநஎ நெடுஞ்சாலை மற்றும் குளிர் சேமிப்பு ஆலைக்கு அருகில் ஒரு வளையத்திற்கு முன்னேறி வருவதாக உக்ரைனின் சிறப்பு தகவல் தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்புக்கான அரச சேவை தெரிவித்துள்ளது.
முன்னதாக, கெர்சன் விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு சத்தம் கேட்டதாக பிபிசி உக்ரைன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன்-கெர்சனில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு!
உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சனில்( Kherson) சக்திவாய்ந்த வெடிகுண்டு சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்திற்கு அருகில் இருந்து இந்த சத்தம் வந்ததாக நம்பப்படுகிறது.
கெர்சன் கிரிமியன் தீபகற்பத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும்.
ஏற்கனவே இந்த நகரத்தை தமது படைகள் முழுமையாக சுற்றிவளைத்;துள்ளதாக ரஸ்யா அறிவித்திருந்தது.
(போர் ஆரம்பிக்கும் முன்னர் கெர்சன் நகருக்கு ஜனாதிபதி சென்றிருந்தார்)
உக்ரைய்னில் ரஸ்ய தொலைபேசி எண்கள் துண்டிப்பு!
ரஸ்ய எண்களைக் கொண்ட தொலைபேசிகள் இனி உக்ரேனிய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பைப் பயன்படுத்த முடியாது என்று உக்ரைனின் அரச சிறப்புத் தொடர்புச் சேவை அறிவித்துள்ளது.
ரஸ்ய ஆக்கிரமிப்புப் படைகள், உக்ரைய்ன் குடிமக்களிடமிருந்து தொலைபேசிகளை அதிகளவில் எடுத்துச் செல்கின்றன" என்று உக்ரைன் அரச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்தே ரஸ்ய தொடர்பு எண்களை உக்ரைய்னிய தொலைதொடர்பு நிறுவனங்கள் துண்டித்து வருகின்றன.
இந்தநிலையில் ரஸ்ய துருப்புக்களால் தங்கள் தொலைபேசிகளை இழந்த உக்ரேனியர்கள், தமது எண்களில் இருந்து ரஸ்யாவுக்கு தொடர்புகொள்வதை தடுப்பதற்காக தொலைபேசி இயக்குநர்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
உக்ரைய்னுக்குள் சென்றுள்ள 75 வீத ரஸ்ய படையினர்
உக்ரைனின் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ரஸ்ய படைகளில் சுமார் 75வீதமானோர் இப்போது உக்ரைய்னுக்குள் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறுகிறது.
ரஸ்ய துருப்புக்களின் முக்கிய முன்னேற்றம் இப்போது தலைநகர் கீவில் இருந்து சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.
ரஸ்ய படையினர்; இன்னும் வடகிழக்கில் கார்கிவ் மற்றும் தெற்கில் மரியுபோல் ஆகிய இரண்டு முக்கிய நகரங்களைக் கைப்பற்றவில்லை.
உக்ரைய்னியர்களின் கடும் போராட்டம் காரணமாக, ரஸ்ய துருப்புக்களால் அவர்கள் திட்டமிட்ட முன்னேற்றத்தை அடைய முடியவில்லை.
இதேவேளை ரஸ்ய ஜனாதிபதி புடினின் அணுவாயு அறிவிப்பு தொடர்பில் எந்த நகர்வுகளையும் தாம் காணவில்லை என்றும் பெலாரஸ் படைகள், ரஸ்ய படைகளுக்கு உதவும் செயற்பாடுகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
கீவ் தலைநகரை நோக்கி ரஸ்யாவின் பாரிய எண்ணிக்கையிலான கனரக வாகனங்களின் படையினர் செல்ல முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 40 மைல் தொலைவுக்கு இந்த வாகன தொரடரணி இருப்பதாக கூறப்படுகிறது
இந்தநிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய 12 ரஸ்ய அதிகாரிகளை அமெரிக்கா நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது
போல்டிக் கடல் பகுதிக்கு ஜெர்மனி போர் விமானங்களை அனுப்பும் ஜெர்மனி
போல்டிக் கடல் பகுதிக்கு உளவுப் பணிக்காக ஜெர்மனி டொர்னாடோ போர் விமானங்களையும் கடல் ரோந்து விமானத்தையும் அனுப்புவதாக ஜெர்மனியின் நேட்டோ பணியகம் தெரிவித்துள்ளது.
பெர்லினில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதனை தெரிவித்துள்ளார்;
பாதுகாப்புக் காரணங்களால் உடனடியாக எந்த விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜெர்மன் கடற்படை ஆறு கூடுதல் போர்க்கப்பல்களை சேவைகளுக்கு அனுப்பியுள்ளது.
இதில் நான்கு கப்பல்கள் போல்டிக் கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ரஸ்யாவுக்கு எதிராக போராட்ட உக்ரைய்ன் வருவோருக்கு வீசா அவசியம் இல்லை
ரஸ்யாவுக்கு எதிராக போராட உக்ரைனுக்குள் நுழைய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு இன்று மார்ச் 1 முதல் விசா இல்லாத பயணம் அனுமதிக்கப்படும், என்று உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரஸ்ய படையினர் திங்களன்று கார்கிவில் "போர்க்குற்றம்" செய்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், கார்கிவில் ரஸ்ய படையினர் பொதுமக்களை திட்டமி;ட்டு அழித்தமையை நேரில் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
(ஆயுதத்துடன் உக்ரையன் வீதியில் நிற்கும் உக்ரையன் பொதுமகன்)
“அமைதியான உக்ரேனியர்களைக் கொன்றதற்காக உலகில் யாரும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
“எதிரிகளுக்கு, கெய்வ் ஒரு நகரமே முக்கிய குறிக்கோள்” என்றும் அவர் குறிப்பிட்டார் “
"அவர்கள் மின் உற்பத்தி நிலையத்தை மூடிவிட்டு அந்த நகரத்துக்கு மின்சாரம் இல்லாமல் செய்ய முயற்சிக்கிறார்கள்”
எனினும் தலைநகரின் பாதுகாப்பை உடைக்க உக்ரைய்னிய படையினர் அவர்களை அனுமதிக்கவில்லை. என்றும் ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர்க்களத்தில் ரஸ்யா தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் (thermobaric) ஆயுதத்தைப் பயன்படுத்தியது என்று அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார்.
இது, ஜெனீவா மாநாட்டால் தடைசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸின் மாநாட்டில் இருந்து வெளிவந்த பின்னர் அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
தெர்மோபரிக் ஆயுதங்களை வழக்கமான வெடிமருந்துகளாக பயன்படுத்துவதில்லை.
தெர்மோபரிக் ஆயுதங்கள், உயர் அழுத்த வெடிபொருளால் நிரப்பப்பட்டு, சுற்றியுள்ள சூழலில் இருந்து ஒக்ஸிஜனை உறிஞ்சி மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு மற்றும் அழுத்த அலையை உருவாக்குகின்றன.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்படி, ரஸ்ய குடியரசின் செச்சினியாவில் அவற்றின் பயன்பாடு இதற்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கடந்த சனிக்கிழமையன்று, ரஸ்ய நகரமான பெல்கோரோட் அருகே தெர்மோபரிக் உந்துனையை பார்த்ததாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.