இலங்கை அமைச்சரவையில் சிறிய மாற்றம்: கசிந்த தகவல்
இலங்கையின் அமைச்சரவையில் சிறிய மாற்றம் ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக்காலமாக அமைச்சர்கள் சிலருக்கும் ராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற திணைக்களப் பொறுப்பு இழுபறி மற்றும் வசதிகள் குறித்து பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இந்த மாற்றம் நிகழவுள்ளதாக அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.
மாற்றங்கள் குறித்த கலந்துரையாடல்
முன்னதாக இந்த பிரச்சினைகள் குறித்து கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அமைச்சுக்களின் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் அமைச்சரவை அலுவலகம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரை பெரிய அளவிலான தரவுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அலுவலகம் உட்பட, மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்தும் அனைத்து அரசாங்க அலுவலகங்களும், பாரிய வைரஸ் தாக்குதலுக்குப் பின்னர், 2023 மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரையிலான தரவுகளை இழந்துள்ளதாக, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ஐசிடீஏ உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதல்; சுமார் 5,000 மின்னஞ்சல் முகவரிகளை பாதித்திருக்கலாம் என்று ஐஊவுயு நிறுவன மேலாளர் மகேஸ் பெரேரா கூறியுள்ளார்.
சுமார் இரண்டரை மாத மதிப்புள்ள தரவுகளுக்கு ஓஃப்லைன் காப்புப்பிரதி )எதுவும் இல்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டதுடன், ஒன்லைன் காப்பு பிரதிகளும் சிதைந்து விட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தொலைந்து போன தரவுகளை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறது என்று பெரேரா கூறியுள்ளார்.