மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் திருட்டில் ஈடுபட்ட இரு இராணுவ உறுப்பினர்கள் கைது
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து கணனிகள் மற்றும் மின் விளக்குகளை திருடிச் சென்ற இரண்டு இராணுவ உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைதானது இன்று(10.09.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் கடமையில் ஈடுபட்டுவந்த இரு இராணுவத்தினர் அங்கிருந்த 5 கணனிகள் மற்றும் 80 மின் விளக்குகளை திருடியுள்ளனர்.
பொலிஸ் சோதனை
அவற்றை பொதி செய்து பயணித்த நிலையில் வெலிகந்தை வீதி சோதனைச் சாவடியில் பொலிஸார் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருடி செல்லப்பட்ட பொருட்களுடன் இரு இராணுவ உறுப்பினர்களையும், முச்சக்கரவண்டி சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரும் வெள்ளவாய, குருநாகலை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை இராணுவம் பெறுப்பேற்ற பின்னர் பல இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரணியல் பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக பல்கலைகழக நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் 5 முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri