வன்னியில் கொலை செய்யப்பட்ட பெண்: 5 மாதங்களின் பின் சந்தேகநபர் கைது
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - உடையார்க்கட்டுப் பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 5 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் இந்துருவ பகுதியில் நேற்று (09.09.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை
கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த 60 வயதான நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
