ஐக்கிய நாடுகளின் செயற்திட்டத்திற்கான அமைப்பினூடாக நீர்வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்(Photos)
ஐக்கிய நாடுகளின் விசேட செயற்திட்டத்திற்கான அமைப்பின் தெற்காசியாவின் பணிப்பாளர் சார்லஸ் காலனன் மற்றும் விசேட செயற்திட்ட முகாமையாளர், செயற்திட்ட மேலாளர் ஆகியோருக்கும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(10.09.2023) தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நீர்வழங்கல் துறையில் விசேட செயற்திட்டங்களை அமுல்படுத்தவும், தங்குதடையின்றி நீர்வழங்கலை வழங்கவும், நீர் சுத்திகரிப்பில் மீளாக்க வலுவுற்பத்தியை பயன்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
விசேட வேலைத்திட்டங்கள்
மேலும், நீர்வழங்கல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குதல் தொடர்பாகவும், பண்ணாட்டு முதலீட்டு முறைமை மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியுடன் நீர் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பெருந்தோட்ட பகுதிகளில் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட இருக்கும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பாக விசேட செயற்திட்டங்களை மேற்கொள்ளவும், சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளை நாடுவதற்கும் முன்மொழிவுகளை உருவாக்குவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளது.
இக் கலந்துலையாடலில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர், பிரத்யேக செயலாளர் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

யாழ்.தையிட்டி விகாரை காணி சுவீகரிப்பு முயற்சிக்கு எதிராக அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு- செய்திகளின் தொகுப்பு





ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
