யாழில் இளம் சட்டத்தரணி திடீரென உயிரிழப்பு!
யாழ். வடமராட்சி, அல்வாய் பகுதியில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.3.2026) இடம்பெற்றுள்ளது.
மனோகரா பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இளம் சட்டத்தரணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சட்டத்தரணி நிகாஷ் நேற்று மாலை 5 மணியளவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது, தனக்கு நெஞ்சுப் பகுதியில் ஒருவித அசௌகரியம் இருப்பதாகத் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு இஞ்சித் தேநீர் வழங்கப்பட்ட நிலையில், இரவு 7 மணியளவில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது.
உடனடியாக அவர் நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழப்பு
பின்னர் மேலதிக சிகிச்சைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த சட்டத்தரணி நிகாஷின் மனைவி, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார்.

ஒரு திறமையான இளம் சட்டத்தரணியின் இந்தத் திடீர் மறைவு வடமராட்சி மற்றும் யாழ். சட்டத்தரணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டைக் குழந்தைகளின் தந்தையான இவரது மறைவு அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri