உக்ரைன் ஜனாதிபதிக்கு வழங்கவுள்ள பட்டம்! பிரித்தானிய எம்.பிக்கள் விடுத்துள்ள கோரிக்கை
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது நாளாக இன்று நீடித்து வருகின்றது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ச்சியாக தனது படைகளுடன் போராடி வருகின்றார்.
மேலும், “எங்கள் நிலத்துக்காக என்ன விலை கொடுத்தாலும் தொடர்ந்து போராடுவோம். காடுகளிலும், வயல்களிலும், கரைகளிலும், தெருக்களிலும் போராடுவோம். நமக்கானதை நாங்கள் இழக்க விரும்பவில்லை, நாங்கள் தொடங்காத, நாங்கள் விரும்பாத போரில் உக்ரைனியர்கள் தங்கள் நாட்டுக்காக போராடி வருகின்றனர்.
இதேவேளை, உக்ரைன் ஜனாதிபதியின் உரைக்கு பிரித்தானிய சபை அமர்வில் கைத்தட்டி வரவேற்பினையும் வழங்கி தமது ஆதரவினையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஆதரித்து சிறப்பு பட்டமளிக்க பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனிடம் பிரித்தானிய எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரஷ்ய துருப்புகளின் நெருக்கடியை அடுத்து, உக்ரைனில் இருந்து பத்திரமாக வெளியேற்ற முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு மறுப்பு தெரிவித்த ஜெலென்ஸ்கி, தம்மை பாதுகாப்பதைவிட தமது துருப்புகளுக்கு ஆயுதம் வழங்குங்கள் அவர்கள் எங்களை பாதுகாப்பார்கள் என துணிச்சலாக தெரிவித்திருந்தார்.
இக்கட்டான சூழலிலும் உக்ரைனுக்கு அவர் அளித்துவரும் ஊக்கத்திற்காக, இங்கிலாந்து குடிமகன் அல்லாத ஒருவருக்கு நாம் வழங்கக்கூடிய மிக உயர்ந்த மரியாதைக்கு அவர் முற்றிலும் தகுதியானவர் எனவும் எம்.பி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
ஆயுத வாகனங்களை தாக்குவோம்! - மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் அகதிகளுக்கு உதவுபவர்களுக்கு பணப்பரிசு! பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு